முதல் வாரமே குறும்படம் இருக்குமா? பிக் பாஸ் நிகழ்ச்சியில் பரபரப்பு

 

உப்பு போட்டு சாப்பிடுபவன் பிக் பாஸ் வீட்டில் இருக்கமாட்டார் என்று ஒருவர் கூறுகிறார், தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் அனைவரையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றார், ஆனால் நாம் வேடிக்கை பார்க்க முடியாது எதையாவது செய்ய வேண்டும் என்று கமல் கூறுவதுபோல் இன்றைய புரொமோ நிகழ்ச்சி உள்ளது

முன்னதாக வெளியிட்ட ஒரு புரொமோவில் அவரது விஸ்வரூபம் படத்தின் பாடல் பின்னணியில் ஒலிக்க அவர் ஸ்டைலாக நடந்து வருவது போன்ற காட்சிகள் உள்ளன 

இந்த இரண்டு புரொமோக்களை வைத்து பார்க்கும் போது இம்முறை அவர் அனிதா சம்பத் மற்றும் சுரேஷ் சண்டையை குறித்து இன்று பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அநேகமாக முதல் வாரமே குறும்படமும் போட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது, மேலும் சுரேஷ் சக்கரவர்த்தியை கமல்ஹாசன் கண்டிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது 

கமல்ஹாசனுக்கு சுரேஷ் சக்ரவர்த்தி மிகவும் நெருக்கமானவராக இருந்தாலும் முதல் நாளே அவர் கண்டிக்கப் பட வாய்ப்பு உள்ளது. அது மட்டுமின்றி புன்னகை மன்னன் பட காட்சியையும் சுரேஷ் சக்ரவர்த்தி கேலி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

எனவே இன்றைய நிகழ்ச்சியில் கமல்ஹாசனை இடம் சுரேஷ் சக்ரவர்த்தியை கண்டிப்பது மட்டுமின்றி கேப்டனாக தேர்வு செய்யப்பட்ட ரம்யாவுக்கு திட்டு உறுதி என்றே தெரிகிறது


 

From around the web