மீண்டும் வைல்ட்கார்ட் எண்ட்ரியில் செல்கிறாரா சுரேஷ்?

 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சுரேஷ் கடந்த வாரம் வெளியேற்றப்பட்ட போது அனைத்து பார்வையாளர்களும் கிட்டத்தட்ட அதிர்ச்சி அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடைசிவரை இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட சுரேஷ் நீக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியாக இருந்தது

இந்த நிலையில் இன்று தனது யூடியூப் சேனலில் பேட்டி அளித்த சுரேஷ் சக்கரவர்த்தி மீண்டும் வைல்ட்கார்ட் எண்ட்ரியாக தன்னை அழைத்தால் கண்டிப்பாக வீட்டிற்குள் செல்வேன் என்றும் ஆனால் மறுபடியும் எனக்கு வாய்ப்பு கொடுத்தால் சக போட்டியாளர்களை வச்சி செய்வேன் என்றும் அவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 

suresh interview

மேலும் பிக்பாஸ் போட்டியாளர்களை பார்த்து பயந்தீர்களா? என்ற கேள்விக்கு ’நான் ஏன் பயப்பட வேண்டும்? அங்கு இருப்பவர்கள் எல்லோருமே செத்த பாம்புகள், என்னை பார்த்து தான் அவர்கள் எல்லோரும் பயந்தார்கள்’ என்று கூறினார் 

மேலும் சோம் குறித்து எல்லோரும் எடுப்பார் கைப்பிள்ளை என்று கூறுகிறார்கள். ஆனால் என்னை பொறுத்தவரை இடுப்பில் உட்கார்ந்து கொண்டிருக்கும் கைப்புள்ள என்று தான் கூறுவேன் என்று கூறினார் 

அனிதா மற்றும் ரம்யா அபாயகரமான போட்டியாளர்கள் என்று கூறிய சுரேஷ், இதற்கு முந்தைய சீசனில் தனக்கு பிடித்தவர்கள் சேரன், ஓவியா, ஹரிஷ் கல்யாண் உள்பட ஒருசிலரின் பெயரைக் குறிப்பிட்டார். குறிப்பாக ஹரிஷ் கல்யாண் தான் அந்த சீசனின் டைட்டில் பட்டத்தை வென்று இருக்க வேண்டும் என்று அவர் கூறியது ஆச்சரியத்தை அளித்தது

From around the web