தொழிலதிபருடன் டிடிக்கு விரைவில் திருமணமா?
கேரளாவை சேர்ந்த தொழிலதிபரை டிடி இரண்டாவது திருமணம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.
Wed, 10 Feb 2021

தமிழ் சினிமா மக்கள் எல்லோரும் அதிகம் விரும்பும் ஒரு தொகுப்பாளினி டிடி. இவர் நிகழ்ச்சி எல்லாமே படு ஹிட்டடித்துள்ளது.
மிகவும் கலகலப்பாக நிகழ்ச்சிகளை நடத்தி எல்லோரையும் சிரிக்க வைப்பார். இவர் ஸ்ரீகாந்த் என்ற தனது நீண்டநாள் நண்பரை திருமணம் செய்துகொண்டார், பின் சில பிரச்சனைகளால் இருவரும் பிரிந்துவிட்டனர்.
தற்போது டிடியின் இரண்டாவது திருமணம் என்று ஒரு வதந்தி உலா வருகிறது. கேரளாவை சேர்ந்த தொழிலதிபரை டிடி இரண்டாவது திருமணம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால் வழக்கம் போல் டிடியும் இந்த வதந்திகளை பார்த்துவிட்டு கண்டுகொள்ளாமல் தனது வேலையில் பிஸியாக இருக்கிறார்.