பாலாவின் ‘வர்மா’ ஓடிடியில் ரிலீஸா? தயாரிப்பாளர் விளக்கம்

பாலா இயக்கிய ’வர்மா’ என்ற திரைப்படத்தை பார்த்த தயாரிப்பு தரப்பு அந்த படத்தில் எங்களுக்கு திருப்தி இல்லை என்றும் இதனால் மீண்டும் ஒருமுறை இந்த படத்தை உருவாக்க இருப்பதாக அறிவித்து ’ஆதித்ய வர்மா’ என்ற படத்தை முழுமையாக எடுத்து கடந்த ஆண்டு ரிலீஸ் செய்தது என்பது தெரிந்ததே 

இந்த நிலையில் பாலா இயக்கிய ’வர்மா’ திரைப்படம் ஓடிடி பிளாட்பாரத்தில் வெளியாக இருப்பதாக அவ்வப்போது செய்திகள் வெளிவந்து கொண்டே இருப்பதும் அந்த செய்தியை தயாரிப்பு தரப்பு பார்த்துக் கொண்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் வரும் ஆயுத பூஜை அன்று அமேசான் பிரைமில் ’வர்மா’ திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளதாகவும் தீபாவளி அன்று ஒளிபரப்பாக உள்ளதாக சில வதந்திகள் கோலிவுட்டில் பரவி வருகிறது

இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தயாரிப்பாளர் இதுகுறித்து கூறிய போது ’வர்மா’  படத்தை ரிலீஸ் செய்யும் ஐடியா எங்களுக்கு இல்லை என்றும் எனவே அந்த படம் ரிலீஸ் ஆக இருப்பதாக வெளிவந்த செய்தியில் உண்மை என்றும் தெரிவித்துள்ளார். எனவே வர்மா படம் வெளிவர வாய்ப்பே இல்லை என்பதுதான் இப்போதைய நிலை என்பது குறிப்பிடத்தக்கது

From around the web