ஆஜித்துக்கு இப்படியெல்லாம் நடிக்க வருமா? ஹீரோ ஆகிடுவாரோ?

 

பிக்பாஸ் வீட்டில் ஆஜித் மிக்சர் சாப்பிடும் கூட்டங்களில் உள்ள ஒருவராக தான் இதுவரை கருதப்பட்டு வருகிறார். இருப்பினும் அவர் 75 நாட்களை தாண்டி விட்டார் என்பது அனைவருக்கும் ஆச்சரியமான ஒன்றுதான் என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக பிக்பாஸ். போட்டியாளர்கள் ஒவ்வொருவரையும் கன்பெக்சன் அறைக்கு வரவழைத்து அவர்களிடம் பேசி வருகிறார். அந்த வகையில் நேற்று ஆஜித்தை கன்பெக்சன் அறைக்கு வரவழைத்த பிக் பாஸ், இந்த 70 நாட்களில் நீங்கள் செய்தது என்ன என்றும், வெளியே போனவுடன் உங்களுடைய குறிக்கோள் என்ன என்றும் கேட்கிறார்

aajith acting

அதன்பிறகு பிக்பாஸ் ஆஜித்தை நடிப்பதற்கு ஒரு காட்சி கொடுக்கிறார். நீங்கள்தான் அந்த படத்தின் ஹீரோ என்றும் வில்லன் உங்கள் அம்மாவை துப்பாக்கி முனையில் பிடித்து வைத்திருக்கிறார் என்றும் கூறுகிறார். அப்போது பிக்பாஸ் அம்மா ஓகேவா அல்லது கேர்ள் ஃபிரண்ட் வைத்துக்கொள்ளலாமா? என்று கேட்க கேர்ள் பிரண்டை வைத்துக்கொள்ளலாம் என்று கூறுகிறார் ஆஜித்

இதைத்தான் நான் எதிர்பார்த்தேன் என்று கூறிய பிக்பாஸ் அதன் பின்னர் நீங்கள் வில்லன் சொல்வதை செய்யவில்லை என்றால் உங்கள் கேர்ள் பிரண்டை சுட்டு விடுவேன் என்று மிரட்டுகிறார். அப்போது நீங்கள் பேச வேண்டிய வசனம் என்ன? நடிக்க வேண்டியது எப்படி? என்று கேட்கிறார் 

உடனே ஆஜித் மிக அருமையாக நடித்து காட்டுகிறார். அந்த நடிப்பை பார்த்து பிக்பாஸ் மட்டுமல்ல பார்வையாளர்களும் அசந்து போய்விட்டனர். தமிழ் சினிமாவில் நடிக்கத் தெரிந்த ஹீரோ உருவாகி விட்டாரோ என்ற கேள்வியையும் ஆச்சரியத்தையும் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்தவுடன் ஆஜித்திற்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்குமா? அல்லது அவர் பாடகராவாரா?  என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

From around the web