சூர்யா ஏன் அக்டோபர் 30ஆம் தேதியை தேர்வு செய்தார்? சமூக வலைதளங்களில் பரவும் வதந்தி

நடிகர் சூர்யா நடித்த சூரரைப்போற்று என்ற திரைப்படத்தை அக்டோபர் 30-ஆம் தேதி ஓடிடியில் வெளியிட இருப்பதாக நேற்று அதிகாரப்பூர்வமான அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் ஓடிடியில் ரிலீஸ் செய்ய இன்னும் இரண்டு மாதம் எதற்காக சூர்யா காத்திருக்க வேண்டும் குறுகிய காலத்திலேயே வெளியிடலாமே என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுந்தது இந்த நிலையில் சூர்யா ஏன் அக்டோபர் 30 ஆம் தேதியை தேர்வு செய்தார் என்பது குறித்த வதந்தி ஒன்று
 

சூர்யா ஏன் அக்டோபர் 30ஆம் தேதியை தேர்வு செய்தார்? சமூக வலைதளங்களில் பரவும் வதந்தி

நடிகர் சூர்யா நடித்த சூரரைப்போற்று என்ற திரைப்படத்தை அக்டோபர் 30-ஆம் தேதி ஓடிடியில் வெளியிட இருப்பதாக நேற்று அதிகாரப்பூர்வமான அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் ஓடிடியில் ரிலீஸ் செய்ய இன்னும் இரண்டு மாதம் எதற்காக சூர்யா காத்திருக்க வேண்டும் குறுகிய காலத்திலேயே வெளியிடலாமே என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுந்தது

இந்த நிலையில் சூர்யா ஏன் அக்டோபர் 30 ஆம் தேதியை தேர்வு செய்தார் என்பது குறித்த வதந்தி ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. அக்டோபர் 30-ஆம் தேதி தான் மிலாடி நபி என்பதால்தான் அந்த நாளில் வெளியிட சூர்யா முடிவு செய்ததாக கூறப்படுகிறது

சூர்யா ஏற்கனவே இஸ்லாமிய மதத்தில் இணைந்து விட்டதாக ஒரு வதந்தி கூறப்படும் நிலையில் தற்போது அதையும் இந்த படம் ரிலீஸ் செய்வதையும் இணைத்து வதந்தி பரப்புபவர்கள் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

ஆனால் ரிலீஸ் தேதியை சூர்யா மட்டும் முடிவு செய்வதில்லை என்பதும் அமேசான் நிறுவனம் இணைந்து முடிவு செய்ததுதான் என்றும், எனவே மிலாடி நபி ரிலீஸ் செய்வது என்பது தற்செயலாக நடந்த ஒன்றே என்றும் சூர்யா தரப்பினர் விளக்கம் அளித்து வருகின்றனர்

From around the web