ஆரியின் முகத்தில் ஏன் இத்தனை கோபம்? நெட்டிசன்கள் கிண்டல்!

 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்று ஃபினாலே டாஸ்க்குகள் இரண்டு சுற்றுகள் முடிந்த பின்னர் அதிகபட்சமாக புள்ளிகளை எடுத்த ரம்யாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து கொண்டு வந்தபோது ஆரியின் முகத்தில் கோபம் வெளிப்படையாகத் தெரிந்த காட்சிகள் ஒளிபரப்பப்பட்டதால் நெட்டிசன்கள் கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர் 

மற்றவர்களின் வெற்றியில் தன்னுடைய சந்தோசத்தை பார்ப்பதாக அடிக்கடி கூறி வரும் ஆரி, நேற்று டாஸ்குகள் முடிவில் வெற்றி பெற்ற ரம்யாவுக்கு இனிமையான முகத்துடன் வாழ்த்து கூற மனமில்லாமல் அத்தனை கோபத்துடன் அவர் பார்த்துக் கொண்டிருந்ததை விஜய் டிவி ஏன் அவ்வளவு நேரம் காட்டியது என்பது ஒரு பெரும் கேள்விக்குறியாக உள்ளது 

aari ramya

கடந்த சில நாட்களாகவே ஆரியை மட்டம் தட்டும் வகையில் உள்ள காட்சிகளை பிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிகம் ஒளிபரப்பி வருவதாக கூறப்பட்டு வரும் நிலையில் நேற்றைய எபிசோடில் ஆரி கோபமாக இருப்பது போன்ற காட்சிகளை தவிர்த்திருக்கலாம் என்பதே ஆரி ரசிகர்களின் கருத்தாக உள்ளது 

இருப்பினும் தனது சக போட்டியாளர்கள் ஏற்றத்தை கண்டு எப்பொழுதுமே ஆரி பொறாமைப்பட்டதோ, கோபப்பட்டதோ இல்லை என்றும் அவருடைய முகத்தில் இருந்த கோபம், ரம்யாவின் சந்தோஷத்துக்கு எதிரானது என பொய்யாக காண்பித்து உள்ளதாக ஆரி ரசிகர்கள் குறைகூறி வருகின்றனர் 

எப்போதுமே ஆரி திறமையானவர்கள் கப்பை வெல்ல வேண்டும் என்றுதான் கூறிக் கொண்டிருக்கிறார் என்பதும் தான் வெல்ல வேண்டும் என்று அவர் ஒருபோதும் கூறியதில்லை என்றும் ஆரி ரசிகர்கள் விளக்கம் அளித்து வருகின்றனர்

From around the web