நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தில் ரஜினி சேராதது ஏன்? பரபரப்பு தகவல்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் ஏற்கனவே இயங்கி வந்த நிலையில் அந்த சங்கம் திடீரென தமிழக அரசின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது. இதனை அடுத்து பாரதிராஜா தலைமையில் ’நடப்பு தயாரிப்பாளர் சங்கம் என்ற ஒரு புதிய சங்கம் சமீபத்தில் தொடங்கப்பட்டு தற்போது விறுவிறுப்பாக செயல்பட்டு வருகிறது இந்த நிலையில் இந்த தயாரிப்பாளர் சங்கத்தில் தற்போது திரைப்படம் தயாரித்துக் கொண்டிருக்கும் பல முன்னணி தயாரிப்பாளர்களும் நடிகர்களும் இணைந்துள்ளனர். குறிப்பாக மணிரத்னம் கமல்ஹாசன் ஆகியோருடன் இணைந்து விட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது ஆனால்
 

நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தில் ரஜினி சேராதது ஏன்? பரபரப்பு தகவல்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் ஏற்கனவே இயங்கி வந்த நிலையில் அந்த சங்கம் திடீரென தமிழக அரசின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது. இதனை அடுத்து பாரதிராஜா தலைமையில் ’நடப்பு தயாரிப்பாளர் சங்கம் என்ற ஒரு புதிய சங்கம் சமீபத்தில் தொடங்கப்பட்டு தற்போது விறுவிறுப்பாக செயல்பட்டு வருகிறது

இந்த நிலையில் இந்த தயாரிப்பாளர் சங்கத்தில் தற்போது திரைப்படம் தயாரித்துக் கொண்டிருக்கும் பல முன்னணி தயாரிப்பாளர்களும் நடிகர்களும் இணைந்துள்ளனர். குறிப்பாக மணிரத்னம் கமல்ஹாசன் ஆகியோருடன் இணைந்து விட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டும் நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தில் இதுவரை இணையவில்லை என்று கூறப்படுகிறது. இதனை இந்த நிலையில் இதுகுறித்து விசாரித்தபோது நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தில் தற்போது திரைப்படம் தயாரித்துக் கொண்டிருக்கும் தயாரிப்பாளர்கள் மட்டுமே சேர்க்கப்படுவார்கள் என்ற நிபந்தனை உள்ளது

இந்த நிபந்தனை காரணமாக பல வருடங்களாக திரைப்படங்கள் தயாரிக்காமல் இருக்கும் ரஜினிகாந்த் தார்மீக அடிப்படையில் சேரவில்லை என்றும் ஆனால் அதே சமயத்தில் அந்த தயாரிப்பாளர் சங்கத்துக்கு தனது முழு ஆதரவு உண்டு என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன

From around the web