விஜய்யை எம்ஜிஆர் போல் சித்தரிப்பது ஏன்? கடம்பூர் ராஜூ விளக்கம்

நடிகர் விஜய்யை எம்ஜிஆரின் திரைப்படங்களுக்கு உருவகப்படுத்தி ரசிகர்கள் போஸ்டர் அடித்து ஒட்டி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்களின் இந்த செயலுக்கு எம்ஜிஆர் ரசிகர்கள் மற்றும் அதிமுகவினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இதுகுறித்து செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியபோது, ‘எம்ஜிஆர் என்றென்றைக்கும் போற்றப்படுகின்ற தலைவர். நடைமுறையில் இன்றைக்கும் மக்கள் மனதில் அழிக்க முடியாத தலைவராக இருக்கிறார். மக்கள் மனதில் அழியா இடம் பிடிப்பதற்கு எம்ஜிஆர் போல இருக்க வேண்டும் என்ற ஆசையின் காரணமாக நடிகர் விஜய்யை எம்.ஜி.ஆர். போல சித்தரித்து விளம்பரப்படுத்தி வருகின்றனர். 

தேர்தல் வரும் சமயத்தில் ஆயிரம் பேர் முதல்வர் வேட்பாளர் என கூறிக்கொண்டு வருவார்கள். ஆனால் 2021 ஆம் ஆண்டு மீண்டும் அதிமுக தலைமையிலான ஆட்சிதான் தமிழகத்தில் அமையும். அதில் மக்கள் தெளிவாக உள்ளார்கள்’ என்று கூறினார்.

மேலும் ஓடிடியில் படம் ரிலீஸ் ஆவது குறித்து கூறியபோது, ‘ஓடிடி-யில் திரைப்படங்கள் வெளியிடுவது என்பது அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இல்லாதது. தற்போது ஓடிடி-ல் வெளியிடப்பட்டு வரும் திரைப்படங்கள், வெப் சீரியல் உள்ளிட்டவைகளுக்கு கேளிக்கை வரி விதிப்பது தொடர்பாக வழிகாட்டுதல்களையும் நெறிமுறைகளையும் மத்திய அரசு தீர்க்கமாக முடிவு செய்தால் அதை தமிழக அரசு நடைமுறைப்படுத்தும் என கூறினார்

From around the web