விஜய்சேதுபதிக்கு காட்டும் எதிர்ப்பை முரளிதரனுக்கு காண்பிக்காதது ஏன்? 

 

நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் முத்தையா முரளிதரன் வாழ்கை வரலாறு திரைப்படமான ’800’ திரைப்படத்திற்கு ஏற்கனவே ஈழத்தமிழர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 

விஜய் சேதுபதியின் அலுவலகம் சென்ற தமிழ் ஆர்வலர்கள் ஈழத்தமிழர்களின் படுகொலைக்கு காரணமான சிங்கள அரசை ஆதரிக்கும் முத்தையா முரளிதரன் வாழ்கை வரலாறு திரைப்படத்தில் நடிக்க கூடாது என்று வலியுறுத்தினார் 

அவர்களுக்கு அந்த படத்தில் நடிக்க மாட்டேன் என்று விஜய் சேதுபதி உறுதியளித்ததாக கூறப்படுகிறது. ஆனால் ‘800’ திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் நேற்று வெளியானது. இதனால் அவர் இந்த படத்தில் நடிப்பது 100% உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவருக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன

ஆனால் அதே நேரத்தில் விஜய் சேதுபதிக்கு எதிர்ப்பை காட்டும் தமிழ் ஆர்வலர்கள் முரளிதரனுக்கு காட்டாமல் இருப்பது ஏன் என்ற கேள்வி எழுகிறது. ஒரு தமிழரின் கிரிக்கெட் அணியான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு பயிற்சியாளராக இருப்பவர் முரளிதரன். அந்த அணியில் இருக்கும் நடராஜன் என்ற தமிழருக்கும் பயிற்சி அளித்து வருகிறார்

சிங்களர்களுக்கு ஆதரவாக இருக்கும் முரளிதரன் ஏன் ஒரு தமிழருக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்ற கேள்வியை இதுவரை ஒருவர் கூட எழுப்பவில்லை. அவ்வாறு இருக்க முரளிதரன் வாழ்கை வரலாறு திரைப்படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதியை மட்டும் கேள்வி எழுப்புவது ஏன் என நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர். இதற்கு ஈழத் தமிழர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

From around the web