படப்பிடிப்புக்கு வர முடியாது: மாஸ் நடிகர்களின் பிடிவாதத்தால் பெரும் பரபரப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த நான்கு மாதங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கும் காரணத்தினால் திரைப்பட படப்பிடிப்புகள் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் நேற்று தமிழக அரசு திரைப்பட படப்பிடிப்புக்கு ஒரு சில நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளது இதனை அடுத்து பல தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் படப்பிடிப்புக்கு தயாராகி வருகின்றனர். அதேபோல் விஷால், விஜய் ஆண்டனி, ஆர்யா, சிம்பு உள்பட பல நடிகர்களும் படப்பிடிப்புக்காக நாங்கள் வர தயார் என்று தெரிவித்துள்ளனர் ஆனால் முன்னணி நடிகர்கள்
 

படப்பிடிப்புக்கு வர முடியாது: மாஸ் நடிகர்களின் பிடிவாதத்தால் பெரும் பரபரப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த நான்கு மாதங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கும் காரணத்தினால் திரைப்பட படப்பிடிப்புகள் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் நேற்று தமிழக அரசு திரைப்பட படப்பிடிப்புக்கு ஒரு சில நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளது

இதனை அடுத்து பல தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் படப்பிடிப்புக்கு தயாராகி வருகின்றனர். அதேபோல் விஷால், விஜய் ஆண்டனி, ஆர்யா, சிம்பு உள்பட பல நடிகர்களும் படப்பிடிப்புக்காக நாங்கள் வர தயார் என்று தெரிவித்துள்ளனர்

ஆனால் முன்னணி நடிகர்கள் ஒரு சிலர் மட்டும் இப்போதைக்கு படப்பிடிப்பு வேண்டாம் எனவும் கொரோனா பாதிப்பு முழுவதுமாக நீங்கும் வரை நாங்கள் படப்பிடிப்பு வர மாட்டோம் என்று பிடிவாதமாக இருப்பதால் அவர்களை வைத்து படங்களை தயாரித்து வரும் படக்குழுவினர் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்

இந்தியா முழுவதும் உள்ள பெரிய நடிகர்களான அமீர்கான், அக்சய்குமார், அமிதாப் பச்சன், மோகன்லால், சிரஞ்சீவி, உட்பட பலரும் படப்பிடிப்புக்கு தயாராகி கலந்து கொண்டிருக்கும் நிலையில் தமிழ் திரை உலகில் உள்ள மாஸ் நடிகர்கள் மட்டும் படப்பிடிப்புக்கு வர மாட்டேன் என்று பிடிவாதமாக இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

From around the web