பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பாரபட்சம் பார்ப்பது ஏன்?

பிக்பாஸ் 3 நிகழ்ச்சி மற்ற சீசன்களைவிட விறுவிறுப்பாக இருக்கக் காரணம் முந்தைய சீசனைவிட அவலங்கள் அதிகம் நடப்பதுதான். கடந்தவாரம் பிக் பாஸ் வீடா? இல்லை இது சண்டைக் காடா? என்கிற அளவு பிரச்சினைகள் மேலோங்கி இருந்தது. வார இறுதியான நேற்று கமல்ஹாசன் வருகையை எதிர்நோக்கி பலரும் காத்திருந்தனர். அவர் கவின்- சாண்டியின் செய்கை குறித்து கேள்விகள் கேட்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது பலருக்கு ஏமாற்றமாகவே இருந்தது. நேற்று முன் தினம் நடிகை மதுமிதா பிக்பாஸ் வீட்டிலிருந்து தற்கொலை
 
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பாரபட்சம் பார்ப்பது ஏன்?

பிக்பாஸ் 3 நிகழ்ச்சி மற்ற சீசன்களைவிட விறுவிறுப்பாக இருக்கக் காரணம் முந்தைய சீசனைவிட அவலங்கள் அதிகம் நடப்பதுதான். கடந்தவாரம் பிக் பாஸ் வீடா? இல்லை இது சண்டைக் காடா? என்கிற அளவு பிரச்சினைகள் மேலோங்கி இருந்தது.

வார இறுதியான நேற்று கமல்ஹாசன் வருகையை எதிர்நோக்கி பலரும் காத்திருந்தனர். அவர் கவின்- சாண்டியின் செய்கை குறித்து கேள்விகள் கேட்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது பலருக்கு ஏமாற்றமாகவே இருந்தது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பாரபட்சம் பார்ப்பது ஏன்?

நேற்று முன் தினம் நடிகை மதுமிதா பிக்பாஸ் வீட்டிலிருந்து தற்கொலை முயற்சி செய்ததால் வெளியேற்றப்பட்டார். அதற்கான விளக்கங்களையும் கமல்ஹாசன் கொடுக்கவில்லை. 


வனிதாவால்  ஏற்பட்ட பிரச்னைகள் குறித்து கேள்விகள் கேட்ட கமல்ஹாசன் ஏன் கவின்- சாண்டியை கேட்கவில்லை என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

லோஸ்லியாவைப் பற்றியும் பெரிதாக எந்தக் கேள்வியும் கேட்கவில்லை, சேரன், கஸ்தூரியிடம் மட்டுமே கேட்டார். இதனால் கமலஹாசன் கவின்- சாண்டி விஷயத்தில் பாரபட்சம் பார்க்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது.

இதனைக் குறித்து மதுமிதாவும் ஏற்கனவே பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web