10 வருடங்களுக்கு முன் நடிகையின் டுவீட் இப்போது வைரலானது ஏன்?

 

பத்து வருடங்களுக்கு முன்னர் நடிகை ஒருவர் பதிவு செய்த டுவிட் ஒன்று தற்போது திடீரென வைரல் ஆகி வருவது இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 

தமிழில் கமல்ஹாசன் நடித்த தசாவதாரம் மற்றும் பல பாலிவுட் பிரபலங்கள் கவர்ச்சி நடிகையாக நடித்தவர் மல்லிகா ஷெராவத். இவர் பத்து வருடங்களுக்கு முன் அமெரிக்கா சென்றிருந்தபோது அப்போது சான்பிரான்சிஸ்கோ மாகாணத்தின் அட்டர்னி ஜெனரலாக இருந்த கமலாஹாரீஸ் அவர்களுடன் புகைப்படம் ஒன்றை எடுத்துக் கொண்டார். 

mallika

அந்த புகைப்படத்தை தனது டுவிட்டரில் பதிவு செய்த மல்லிகா ஷெராவது, கமலா ஹாரீஸ் அவர்களின் கடினமான உழைப்பு தனக்கு உத்வேகத்தை தந்ததாகவும், அவரை பார்த்து தானும் அரசியலில் இறங்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டதாகவும் கடந்த 2010ஆம் ஆண்டு டுவிட் ஒன்றை பதிவு செய்தார்

இந்த நிலையில் தற்போது கமலா ஹாரிஸ் அமெரிக்க துணை அதிபராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் நிலையில் திடீரென அந்த டுவிட்டை தேடி கண்டுபிடித்த நெட்டிசன்கள் தற்போது வைரல் ஆக்கி வருகின்றனர் இந்த தகவல் மல்லிகா ஷெராவத்துக்கு ஆச்சரியமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web