பிரபல இயக்குனரின் கெஸ்ட் ஹவுசுக்கு சென்றது ஏன்? ஸ்ரீரெட்டி அதிர்ச்சி தகவல்

பிரபல இயக்குனர் மற்றும் எழுத்தாளர் கோனா வெங்கட் அவர்களின் கெஸ்ட் ஹவுசுக்கு சென்றது ஏன்? அங்கு என்ன நடந்தது என்ற அதிர்ச்சி தகவலை தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி தற்போது கூறியுள்ளார். இயக்குனர் கோனா வெங்கட் தன்னை அவருடைய கெஸ்ட் ஹவுசுக்கு வருமாறு அழைத்ததாகவும், புதிய பட வாய்ப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்தவே அழைப்பதாகவும் கூறியதை நம்பி அவரது கெஸ்ட் ஹவுசுக்கு சென்றதாகவும், ஆனால் அங்கு அவர் தன்னை வலுக்கட்டாயமாக பாலியல் உறவு கொண்டதாகவும் நடிகை ஸ்ரீரெட்டி கூறியுள்ளார்.
 
பிரபல இயக்குனர் மற்றும் எழுத்தாளர் கோனா வெங்கட் அவர்களின் கெஸ்ட் ஹவுசுக்கு சென்றது ஏன்? அங்கு என்ன நடந்தது என்ற அதிர்ச்சி தகவலை தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி தற்போது கூறியுள்ளார்.
இயக்குனர் கோனா வெங்கட் தன்னை அவருடைய கெஸ்ட் ஹவுசுக்கு வருமாறு அழைத்ததாகவும், புதிய பட வாய்ப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்தவே அழைப்பதாகவும் கூறியதை நம்பி அவரது கெஸ்ட் ஹவுசுக்கு சென்றதாகவும், ஆனால் அங்கு அவர் தன்னை வலுக்கட்டாயமாக பாலியல் உறவு கொண்டதாகவும் நடிகை ஸ்ரீரெட்டி கூறியுள்ளார்.
ஆனால் ஸ்ரீரெட்டியின் இந்த குற்றச்சாட்டை கோனாவெங்கட் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியதாவது:`ந டிகை ஒருவர் சினிமா உலகில் உள்ள பல பிரபலங்களை பற்றியும், என்னைப் பற்றியும் தெரிவித்திருக்கும் குற்றச்சாட்டுக்கள் அதிர்ச்சியை அளிக்கிறது. இந்த விஷயத்தில் அரசு தலையிட்டு, போலீஸ் விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும். உண்மை நிச்சயம் வெளியாகும். என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை நான் சட்டப்படி சந்திப்பேன்’ என்று கூறியுள்ளார்.

From around the web