நான் ஏன் எவிக்ட் ஆனேன்: மனம் திறக்கிறார் சுரேஷ் சக்கரவர்த்தி

 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சுரேஷ் சக்ரவர்த்தி கடந்த ஞாயிறு அன்று வெளியேற்றப்பட்டது ஒட்டுமொத்த பார்வையாளர்களுக்கும் பெரும் அதிர்ச்சியாக இருந்தது 

முதல் நாள் முதல் சிறப்பாக விளையாடி வரும் சுரேஷ் சக்ரவர்த்தி ஒரு சில நாள் சரியாக பர்பாமன்ஸ் செய்யவில்லை என்றால் அவர் வெளியியேற்றப்படுவாரா? என்ற கேள்வியை அனைவரும் எழுப்பி வருகின்றனர்.

ஆரம்பம் முதல் நேற்று வரை எந்த பர்பாமன்ஸ்ஸும் செய்யாமல் மூன்று வேளை சாப்பிட மட்டுமே வந்தது போல் இருக்கும் ஒருசில போட்டியாளர்களை விட சுரேஷ் எவ்வளவோ மேல் என்றும் அவர் எப்படி எவிக்ட் செய்யப்படலாம் என்ற கேள்வியையும் ஆர்மியினர் எழுப்பி வருகின்றனர் 

இந்த நிலையில் தான் ஏன் எவிக்ட் செய்யப்பட்டேன் என்பது குறித்து மனம் திறந்து பேச உள்ளார் சுரேஷ் சக்கரவர்த்தி. சுரேஷ் சக்கரவர்த்தியின் யூடியூப் சேனலில் இன்று மாலை 5 மணிக்கு அவர் நேரலையில் இது குறித்து பேச உள்ளார்

உண்மையிலேயே குறைந்த வாக்குகள் தான் அவர் வெளியேற காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்த தகவலை அவர் இந்த நேரடி ஒளிபரப்பில் மனம் திறந்து பேசுவார் என்று எதிர்பார்ப்பு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

From around the web