பிக் பாஸ் சீசனில் அறிவிக்கப்படும் படம் எதுவும் ரிலீஸ் ஆக வில்லையே ஏன்? நெட்டிசன்கள் கேள்வி

 

கமல்ஹாசன் நடிப்பில் உருவாகும் திரைப்படங்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவ்வப்போது அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. ஆனால் அவ்வாறு அறிமுகம் செய்யப்பட்ட படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை என நெட்டிசன்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர் 

பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 1ல் இந்தியன் 2’ பட அறிவிப்பு வெளியானது. இந்த படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஷங்கர் ஆகியோர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இடம்பெற்று இந்த அறிவிப்பை வெளியிட்டனர். ஆனால் அதன் பின்னர் தயாரிப்பாளர் மாற்றப்பட்டார். தற்போது நான்காவது சீசன் வந்துவிட்ட போதிலும் இன்னும் இந்த படம் பாதி கூட முடிக்கப்படவில்லை என்பதும், இந்த படம் கிட்டத்தட்ட கைவிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது 

vikram

அதேபோல் பிக்பாஸ் 3வது சீசனில் தேவர் மகன் இரண்டாம் பாகம் குறித்து அறிவிப்பு வந்தது. அந்த படத்தின் பணிகள் இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது. தற்போது பிக்பாஸ் நான்காவது சீசனில் விக்ரம் படத்தின் அறிவிப்பு வெளியாகி, டைட்டில் டிரெய்லரும் வெளியாகி உள்ளது. இந்த படமாவது வெளிவருமா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர் 

கமலஹாசனின் படங்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்பட்டாலும் அந்த படங்கள் ரிலீஸ் ஆகாமல் இருப்பது ஒரு வகை சென்டிமெண்ட் தான் என கோலிவுட் திரையுலகினர் கூறிவருகின்றனர்

From around the web