பொங்கல் பரிசு ரூ.2500 கொடுப்பது ஏன்? முதல்வர் பழனிசாமி விளக்கம்!

 

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 8 மாதங்களாக வேலை இன்றி வருமானம் இன்றி இருந்த ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில் பொங்கல் பரிசாக தமிழக அரசு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூபாய் 2500 வழங்கும் என இன்று அறிவிக்கப்பட்டது 

இந்த அறிவிப்பு தமிழக மக்களிடையே பெரும் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தேர்தல் நெருங்கும் வேளையில் வாக்காளர்களை கவர்வதற்காக, சுயநல லாபத்திற்காக அதிகப்படியான தொகை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது என திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் விமர்சனம் செய்தார் 

mk stalin

இந்த விமர்சனத்திற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பதிலடி கொடுத்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது: புயல் மழை, கொரோனா என மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதால் பொங்கல் பரிசை உயர்த்தி வழங்குகிறோம். மக்கள் குறிப்பறிந்து சூழலுக்கு ஏற்ப வழங்குவதை சுயநலம் என சொல்வது நியாயமில்லை 

நடைமுறைப்படுத்த முடியாத கவர்ச்சிகரமான திட்டங்களை திமுக அறிவித்து ஏமாற்றுகிறது. ஆனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுப்பதை அதிமுக அரசு கொள்கையாக கொண்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிக உதவி செய்வது தவறா? என பொங்கல் பரிசு குறித்து விமர்சனம் செய்த முக ஸ்டாலின் அவர்களுக்கு முதல்வர் பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web