ஏன் இவ்வளவு சீன் போடுறீங்க? அர்ச்சனாவுக்கு அதிரடிக் கேள்வி கேட்ட நடிகை!

 

பிக்பாஸ் வீட்டில் அர்ச்சனா கொஞ்சம் ஓவராகவே ஆட்டம் போட்டு வருவதாக பார்வையாளர்கள் மத்தியில் கருத்துக்கள் எழுந்து வருகின்றன. குறிப்பாக நேற்றைய கோழிப்பண்ணை டாஸ்க்கின்போது அவர் தனது முட்டையை சோம்சேகர் கீழே போட்டு உடைத்ததற்கு பயங்கர கோபம் அடைந்தார் 

தன்னுடைய புகைப்படம் அதில் இருக்கும் போது அதை எப்படி நீ கீழே போடலாம் என்று சோம் சேகருடன் சண்டைக்கு சென்றார். இதுகுறித்து நடிகை ஸ்ரீப்ரியா தனது டுவிட்டரில் கூறியபோது, ‘கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நாமினேஷன் செய்யும்போது போட்டியாளர்களின் புகைப்படங்களை தீயில் போட்டு எரித்தபோது வராத கோபம் இப்போது முட்டையில் உள்ள போட்டோவை தூக்கி எறிந்தால் மட்டும் ஏன் கோபம் வருகிறது? எதற்காக இப்படி சீன் போடுகிறீர்கள்? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்

sripriya

ஸ்ரீபிரியாவின் இந்த கேள்விக்கு ரசிகர்கள் பல்வேறு கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர். மக்கள் நீதி மய்யம் கட்சியின் முக்கிய நிர்வாகியாக இருக்கும் ஸ்ரீபிரியா கட்சி குறித்த எந்த கருத்தையும் தனது டுவிட்டரில் தெரிவித்ததில்லை ஆனால் பிக்பாஸ் குறித்து அவர் அடிக்கடி விமர்சனம் செய்து டுவிட்டுக்களை பதிவு செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது 

From around the web