ரஜினி பிறந்தநாளுக்கு கமல் வாழ்த்து சொல்லாதது ஏன்? இதோ இரண்டு காரணங்கள்!

 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த 12ஆம் தேதி தனது 70வது பிறந்த நாளை கொண்டாடினார் அவருக்கு ஒட்டுமொத்த திரையுலகமே வாழ்த்து தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது

ஆனால் ரஜினியின் 40 ஆண்டுகால நண்பரான கமல்ஹாசன் வாழ்த்து தெரிவிக்கவில்லை என்பதும் குறைந்தபட்சம் ஒரு டுவிட் கூட பதிவு செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இது அனைவருக்கும் ஆச்சரியமாக இருந்த நிலையில் தற்போது இணையதளங்களில் இதற்கு இரண்டு காரணங்களை கண்டுபிடித்து உள்ளனர் நெட்டிசன்கள்

kamal rajini

கமல்ஹாசன் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிக்கும் திரைப்படம் ஒன்றில் ரஜினிகாந்த் நடிப்பதாக இருந்தது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்த நிலையில் திடீரென ரஜினிகாந்த் அந்த படத்தில் நடிக்க முடியாது என்று கூறிவிட்டார். இது கமல்ஹாசனை ரொம்பவே அப்செட் ஆக்கியது 

அடுத்ததாக ரஜினிகாந்த் கிட்டத்தட்ட அரசியலுக்கு வரமாட்டார் என்று செய்திகள் உறுதி செய்தன. அதுமட்டுமன்றி அவர் அரசியலுக்கு வராத பட்சத்தில் கமல்ஹாசனுக்கு மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ ஆதரவு தெரிவிப்பார் என்றும் கமல் எதிர்பார்த்தார். ஆனால் திடீரென ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவிருப்பதை உறுதி செய்ததும் கமல்ஹாசனுக்கு சற்று அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது

இந்த இரண்டு காரணங்களால் தான் அவர் ரஜினியின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது

From around the web