நீங்கள் ஏன் பிக் பாஸ் வந்தீர்கள்? இந்த கேள்வி கமல்ஹாசனுக்கா? சோம்சேகருக்கா?

 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் காலர் ஒருவர் வெளியிலிருந்து போட்டியாளர் ஒருவருக்கு கேள்வி கேட்டு வருகிறார். ஏற்கனவே ஷிவானி, ஆஜித் ஆகியோர்களுக்கு கேள்வி கேட்ட நிலையில் இந்த வாரம் சோம்சேகருக்கு காலர் ஒரு கேள்வியை கேட்டார் 

காலர் அவரிடம் 70 நாட்களுக்கு மேல் ஆகி விட்டது இருப்பினும் உங்களது தனித்திறமை இன்னும் வெளியாகவில்லை ஏன்? என்று கேட்டபோது சோம் அதற்கு மறுப்பு தெரிவித்தார். நான் என்னால் முடிந்த வரை என்னுடைய 100% பங்களிப்பைத் தந்து கொண்டிருக்கின்றேன் என்றும், நான் நானாகத்தான் இருந்து விளையாடுகிறேன் என்றும் நீங்கள் எந்த இடத்தில் நான் தனித்து இருக்கவில்லை என்று சொல்கிறீர்கள் என எனக்கு தெரியவில்லை என்றும் கூறினார்

somsekar to caller

மேலும் கமல்ஹாசனிடம் அதே காலர் நீங்கள் ஏன் பிக் பாஸ் வந்தீர்கள்? நீங்கள் பார்க்காத புகழில்லை வாங்காத விருது இல்லை, பெறாத புகழ் இல்லை, அப்படியிருந்தும் பிக்பாஸ் வந்தது ஏன் என்று கேட்க கமலஹாசனும் அதற்கு ஒரு விளக்கத்தைக் கூறினார் 

நான் என்னை நானே பார்த்துக் கொள்வதற்கு இந்த நிகழ்ச்சியை பயன்படுத்திக் கொண்டேன் என்றும் இந்த நிகழ்ச்சியின் மூலம் கிடைக்கும் புகழ் எனக்கு கிடைத்த மற்ற புகழை விட அதிகமாக தெரிகிறது என்றும் அவர் கூறினார் 

ஆனால் 70 நாட்கள் ஆகியும் கமல் தன்னுடைய தனித்திறமையை போட்டியை நடத்துவதில் காண்பிக்கவில்லை என்று அவரிடம் மறைமுகமாக கேட்பதற்கு பதில், அந்த காலர் சோம்சேகரிடம் கேட்டதாக சமூக வலைத்தளங்களில் பதிவாகி வருகிறது

From around the web