இந்த டுவிட்டை ஐஸ்வர்யா ராஜேஷூக்கு ஏன் டேக் செய்தார் உதயநிதி?

 

சென்னை மழை குறித்த டுவிட் ஒன்றை பதிவு செய்த உதயநிதி ஸ்டாலின் அந்த டுவிட்டை ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு டேக் செய்திருப்பது ஏன் என்ற குழப்பத்தில் நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளனர் 

நடிகரும் திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அவ்வப்போது ஆளும் அரசை கண்டித்து டுவிட்டரில் பதிவு செய்து வருவது தெரிந்தது. அந்த வகையில் சென்னை மழை குறித்து சற்று முன்னர் அவர் தனது ட்விட்டரில் சில டுவிட்டுகளை பதிவு செய்துள்ளார்

அதில் ஒரு ட்வீட்டை உதயநிதி ஐஸ்வர்யா ராஜேஷுக்கு டேக் செய்து உள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ் என்ன முதல்வரா? அல்லது ஆளும் கட்சித் தலைவரா? அவருக்கு ஏன் உதயநிதி டேக் செய்தார் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் இந்த டுவீட்டை ஐஸ்வர்யா ராஜேஷ் லைக் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

சென்னை மழை குறித்து உதயநிதி பதிவு செய்த டுவீட்டுக்கள் இவைதான்:

வீடு - சாலை எங்கும் வெள்ளம். ஒரு நாள் மழைக்கே சென்னை மிதக்கிறது. உள்ளாட்சித் துறையை ஊழலாட்சித் துறை ஆக்கிவிட்ட வேலுமணியும் , அவரது டெண்டர் பார்ட்னர் எடப்பாடியும் அவதூறு போஸ்டர் ஒட்டிய நேரத்தில் கொஞ்சமாவது வடிகால்களை தூர்வாரியிருந்தால் இந்த நிலை வந்திருக்காது

2015 வெள்ளத்திலிருந்து அடிமைகள்  பாடம் கற்கவில்லை. மாறாக இன்னும் வீரியமாக ஊழல் செய்கின்றனர். வெள்ளத்தடுப்பு பணிக்கான நிதியை வேலுமணியின் ஏழு கம்பெனி பினாமிகள் - மாநகராட்சி ஊழல் பெருச்சாளிகள் விழுங்கியதே இந்த அவலத்துக்கு காரணம். மக்கள் மறக்க மாட்டார்கள் அடிமைகளே.

ஒவ்வொரு முறையும், கடும் மழைக்கு சென்னை இரையாகிறது. இதற்கு தீர்வே கிடையாதா?


 

From around the web