பிக்பாஸ் சீசன் 4, கடைசி நாமினேஷனில் சிக்கியது யார் யார்?

 

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி ஜனவரி 16ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இந்த வாரம்தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நாமினேட் செய்யப்படும் கடைசி வாரம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வாரம் போட்டியாளர்கள், சக போட்டியாளர்கள் இருவரை நாமினேட் செய்கின்றனர்.

ஆரி ரியோவையும், ரியோ ஆரியையும், பாலா மற்றும் ஆரியை சோம்சேகரும் நாமினேட் செய்துள்ளனர். எனக்கும் பாலாவுக்கும் நடந்த பிரச்சனை ஒன்றில் ரியோ ஒரு கருத்தை கூறியதாகவும் அந்த கருத்து தனக்கு உடன்பாடு இல்லை என்றும் அவரிடம் விளக்கம் கேட்டும் அவர் அளித்த விளக்கம் தனக்கு திருப்தி இல்லை என்றும் அதனால் ரியோவை நாமினேட் செய்வதாகவும் கூறினார் 

aari nominate

ஆரி மற்றும் பாலாஜி இருவருமே அதிகமாக கோபப்படுகிறார்கள் என்றும் இந்த கோபம் வெளியில் சென்றாலும் ஆபத்து என்றும் அதனை அவர்கள் திருத்திக்கொள்ள வேண்டும் என்றும் கூறி இருவரையும் சோம் நாமினேட் செய்கிறார்

ஆரியின் மகள் வீட்டிற்கு வந்தபோது கூட டாஸ்க்கில் இருந்தேன். அதனை கூறாமல் வேறு ஒரு காரணத்தை ரியோ கூறியுள்ளார் என்று ஆரி கூறியதால் நான் தவறான நபராக வெளிக்காட்டபடுவேன் என்றும் அந்த அளவுக்குத்தான் கேவலமானவன் நான் இல்லை என்றும் ஒரு விளக்கத்தை அளித்து ஆரியை நாமினேட் செய்கிறார் ரியோ. 

மேலும் வேறு யார் யார் நாமினேட் செய்யப்படுகிறார்கள் என்பதை அடுத்தடுத்த புரோமோ வீடியோவில் பார்ப்போம்

From around the web