வரலட்சுமி கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பது யாருக்கு? வைரலாகும் புகைப்படங்கள்!

சிம்பு நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கிய போடா போடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை வரலட்சுமி. இதனை அடுத்து அவர் விஜய் உள்பட பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தார் என்பதும் தமிழ் சினிமாவில் ஒரே நேரத்தில் அதிக திரைப்படங்களில் நடித்து வரும் நடிகை இவர் ஒருவர்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தற்போது 5 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வரும் வரலட்சுமி இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறையை முன்னிட்டு சுகமான ஞாயிறு விடுமுறை என்ற தலைப்பில் ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்
அதில் தான் செல்லமாக வளர்த்து வரும் நாயைக் கட்டிப் பிடித்துக் கொண்டும், முத்தம் கொடுப்பது போன்ற புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு பல்வேறு ரசிகர்கள் சுவராஸ்யமான கமெண்ட்டுக்களை அளித்து வருகின்றனர். அந்த நாயாக நாங்கள் பிறந்திருக்க கூடாதா என்று ஒரு ரசிகர் ஏக்கத்துடன் கமெண்ட் அளித்திருப்பது நகைச்சுவையின் உச்சம் ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது