பிக்பாஸ் டைட்டில் வின்னர் யார்? ஆரி-ரியோ இடையே கடும் போட்டி!

 

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் டைட்டில் வின்னர் யார்? என்ற கணிப்பு கடந்த சில வாரங்களாக நடைபெற்று வருகிறது. பெரும்பாலானோர் ஆரி தான் டைட்டில் வின்னராக வருவார் என்று கணித்துள்ளனர் 

இருப்பினும் ஒரு சிலர் பாலாஜி மற்றும் ரியோ ஆகிய இருவரில் ஒருவர் டைட்டில் வின்னர் ஆக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. ரம்யாவுக்கும் ஒரு சிலர் ஆதரவு தந்தனர் என்பது தெரிந்ததே 

rio

இந்த நிலையில் கிட்டத்தட்ட ஆரி இறுதிப் போட்டிக்கு நுழைந்துவிட்டது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் நேற்றைய கேப்டன்ஷிப் டாஸ்க்கில் ரியோ வெற்றி பெற்று அடுத்த வார கேப்டன் ஆகி உள்ளார். எனவே அடுத்த வாரம் ரியோவை நாமினேட் செய்ய முடியாது என்பதால் அதற்கு அடுத்த வாரம் நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் ரியோ பங்கேற்பது உறுதி செய்யப்பட்டுவிட்டது

மேலும் ஆரியுடன் கடுமையாக இந்த வாரம் மோதிய பாலாஜி அடுத்த வாரம் நாமினேஷன் சிக்கினால் கண்டிப்பாக வெளியேற்றப்படுவார் என்று கூறப்படுகிறது. அதேபோல்தான் ரம்யாவுக்கும் ஆரி ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எனவே பிக்பாஸ் டைட்டில் ஆரி அல்லது ரியோ ஆகிய இருவரில் யார் என்பது இப்போதைக்கு போட்டியாக உள்ளது என்பதும் அதில் ஆரி டைட்டில் வின்னர் ஆக அதிக வாய்ப்பு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

From around the web