நடிகர் பிரபுவிடம் மன்னிப்பு கேட்ட கலக்க போவது யாரு டீம்? ஏன் தெரியுமா?

 

சிவாஜி கணேசனை கிண்டல் செய்து நிகழ்ச்சி தயாரித்த கலக்கப்போவது யாரு டீம் சிவாஜியின் மகன் பிரபுவிடம் மன்னிப்பு கேட்டுள்ளது 

மக்களின் பெரும் வரவேற்பைப் பெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்று விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கலக்கப்போவது யாரு. இந்த நிகழ்ச்சி தற்போது ஒளிபரப்பாகி வரும் நிலையில் சிவாஜி கணேசன் குறித்த ஒரு காட்சியை கிண்டல் செய்யும் வகையில் இருந்ததாக தெரிகிறது. குறிப்பாக வீரபாண்டிய கட்டபொம்மன், தில்லானா மோகனாம்பாள் உள்ளிட்ட படங்களில் உள்ள சிவாஜியின் வசனத்தை கேலியும் கிண்டலுமாக அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் பேசினார்கள்

இதனால் சிவாஜி ரசிகர்கள் கொந்தளித்து எழுந்ததோடு, சிவாஜி சமூக நல பேரவை தலைவர்  கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதுமட்டுமின்றி சிவாஜியின் மகன் நடிகர் பிரபு இந்த நிகழ்ச்சியில் தயாரிப்பாளரிடம் தனது கண்டனத்தையும் தெரிவித்திருந்தார்

இதனை அடுத்து கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி தயாரிப்பாளர் குழுவினர் இனிமேல் இதுபோன்று நடக்காது என்று உறுதி அளித்ததோடு அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் பிரபுவிடம் மன்னிப்பும் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது

From around the web