பிக்பாஸ் வீட்டின் சிங்கப்பெண் யார்? ரம்யாவா? ஷிவானியா?

 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ’டிக்கெட் டு பினாலே’ என்ற டாஸ்க் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் இறுதியாக ஷிவானி மற்றும் ரம்யா ஆகிய இருவரும் ஒரு டாஸ்க்கில் மோதும் காட்சி இன்றைய அடுத்த புரமோ வீடியோவில் இடம்பெற்றுள்ளது 

நடுவில் உள்ள ஒரு தூணில் கட்டப்பட்டு இருக்கும் இரண்டு கயிறுகளை ஒரு பக்கம் ஷிவானியும், இன்னொரு பக்கம் ரம்யாவும் பிடித்து கொண்டு நிற்கின்றனர். அவர்கள் அருகில் உள்ள ஒரு கூடைகளில் பந்துகள் இருக்கின்றன 

shivani vsramya

கயிற்றை ஒரு கையில் பிடித்து கொண்டே மற்றொரு கையால் பந்தை எடுத்து எதிரில் உள்ளவரை எறிய வேண்டும் என்பதுதான் டாஸ்க். இதனை அடுத்து ரம்யாவும் ஷிவானியும் ஒருகையால் கயிற்றை பிடித்துக் கொண்டு மற்றொரு கையில் பந்துகளால் ஒருவர் மீது ஒருவர் எரிந்து வருகின்றனர்

இந்த காட்சிகளின் பின்னணியில் சிங்கப் பெண்ணே என்ற பாடல் ஒலித்துக் கொண்டிருக்கின்றது. ரம்யா, ஷிவானி ஆகிய இருவரும் மிகவும் சோர்வாக இருந்தாலும் மன உறுதியுடன் தொடர்ந்து விளையாடி வருகின்றனர் என்பதும் மற்றவர்கள் அவர்களை ஊக்கப்படுத்தி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த டாஸ்க்கில் அனேகமாக ஷிவானி வெற்றிபெற வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது


 

From around the web