யார் இந்த ஈஸ்வரிராவ்? காலா நாயகி குறித்து கொஞ்சம் பார்ப்போமா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தின் நாயகி என்றால் கோலிவுட்டின் முன்னணி நாயகிகளாகத்தான் இதுவரை இருந்ததுண்டு. ஆனால் ரஞ்சித் இயக்கிய இரண்டு படங்களிலும் ரஜினிக்கு ஜோடியாக பெயர் தெரியாத நடிகையை தேர்வு செய்துள்ளனர். கபாலி ‘படத்தில் நடித்த பின்னர்தான் ராதிகே ஆப்தே என்றால் யார் என்பதை பலர் தேடினார்கள். அதேபோல் தற்போது ‘காலா’ படத்தில் நடிக்கும் ஈஸ்வரிராவ் குறித்தும் கூகுளில் அதிகம் தேடப்பட்டு வருகிறது. இளையதளபதி விஜய் நடித்த முதல்படமான ‘நாளைய தீர்ப்பு படத்திலேயே ஒரு கேரக்டரில் நடித்தவர்தான்
 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தின் நாயகி என்றால் கோலிவுட்டின் முன்னணி நாயகிகளாகத்தான் இதுவரை இருந்ததுண்டு. ஆனால் ரஞ்சித் இயக்கிய இரண்டு படங்களிலும் ரஜினிக்கு ஜோடியாக பெயர் தெரியாத நடிகையை தேர்வு செய்துள்ளனர்.

கபாலி ‘படத்தில் நடித்த பின்னர்தான் ராதிகே ஆப்தே என்றால் யார் என்பதை பலர் தேடினார்கள். அதேபோல் தற்போது ‘காலா’ படத்தில் நடிக்கும் ஈஸ்வரிராவ் குறித்தும் கூகுளில் அதிகம் தேடப்பட்டு வருகிறது.

இளையதளபதி விஜய் நடித்த முதல்படமான ‘நாளைய தீர்ப்பு படத்திலேயே ஒரு கேரக்டரில் நடித்தவர்தான் இந்த ஈஸ்வரி ராவ். அதன் பின்னர் பாலுமகேந்திரவின் ‘ராமன் அப்துல்லா’, பிரகாஷ்ராஜின் ‘குருபார்வை, ‘சரத்குமாரின் ‘சிம்மராசி;, வசந்த் இயக்கிய ‘அப்பு, விஜயகாந்த் நடித்த ‘தவசி’, சிம்பு நடித்த சரவணா, பிரசாந்த் நடித்த ‘விரும்புகிறேன்’ உள்பட பல தமிழ், தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். இத்தனை படங்கள் நடித்தபோதிலும் அதிக பிரபலமாகாமல் இருந்த ஈஸ்வரிராவை உலக அளவில் காலா படம் அடையாளம் காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web