ஃபிரெண்ட்ஸ் படத்தில் தேவயானிக்கு பதில் இவரா? வைரலாகும் புகைப்படம்!

 

விஜய், சூர்யா, தேவயானி, விஜயலட்சுமி நடிப்பில் சித்திக் இயக்கத்தில் இளையராஜா இசையில் வெளிவந்த திரைப்படம் ஃபிரெண்ட்ஸ். கடந்த 2001 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தத் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே 

இந்த நிலையில் தற்போது இந்த படம் குறித்த பழைய போஸ்டர் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக தேவயானி நடித்த இருந்த நிலையில் அதற்கு முன்னர் ஜோதிகாதான் ஒப்பந்தமாகியிருந்தார். ஆனால் கால்ஷீட் பிரச்சனையால் அவர் இந்த படத்தில் இருந்து விலகியதாக கூறப்பட்டது 

அதேபோல் விஜயலட்சுமிக்கு பதில் சுவலட்சுமி ஒப்பந்தமாகி இருந்ததாகவும் ஒரு சில காரணங்களாலும் அவரும் இந்த படத்தில் இருந்து நீக்கப்பட்டார் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் விஜய், ஜோதிகா, சூர்யா, சுவலட்சுமி, ரமேஷ்கண்ணா ஆகியோர் இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது 

ஃபிரெண்ட்ஸ் படத்தில் ஜோதிகா, சுவலட்சுமி ஆகிய இரண்டு நாயகிகளும் நடித்திருந்தால் இந்த படம் இன்னும் சூப்பராக இருக்கும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

From around the web