சிறைக்குள் செல்லப்போவது சரவணனா அல்லது கவினா..?

கடந்த வாரம் முழுவதும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கலகலப்பாக்கி வந்த கொடூரக் கொலை டாஸ்க், பல திருப்பங்களுடனும், சச்சரவுகளுடனும் முடிவுக்கு வந்தது. பிக்பாஸிடம் இருந்து வந்த அழைப்பை ஏற்ற வனிதா, கவினை வேடிக்கையான முறையில் கொலை செய்வதற்கு ஆயத்தமானார். இதற்கிடையில், கவின் மற்றும் மீரா மிதூன் காவலர்களாக நியமிக்கப்பட்டனர். இறுதியில், துப்பாக்கியை மறைத்து வைத்து கவினை வெற்றிக்கரமாக கொலை செய்தார் முகின் ராவ். இதன்மூலம் கவினை மயானத்திற்கு அனுப்பி வைக்கும் சடங்கு நடந்தது. இத்துடன் ‘கொடூரக் கொலை’ டாஸ்க்
 

கடந்த வாரம் முழுவதும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கலகலப்பாக்கி வந்த கொடூரக் கொலை டாஸ்க், பல திருப்பங்களுடனும், சச்சரவுகளுடனும் முடிவுக்கு வந்தது.

பிக்பாஸிடம் இருந்து வந்த அழைப்பை ஏற்ற வனிதா, கவினை வேடிக்கையான முறையில் கொலை செய்வதற்கு ஆயத்தமானார். இதற்கிடையில், கவின் மற்றும் மீரா மிதூன் காவலர்களாக நியமிக்கப்பட்டனர்.

இறுதியில், துப்பாக்கியை மறைத்து வைத்து கவினை வெற்றிக்கரமாக கொலை செய்தார் முகின் ராவ். இதன்மூலம் கவினை மயானத்திற்கு அனுப்பி வைக்கும் சடங்கு நடந்தது. இத்துடன் ‘கொடூரக் கொலை’ டாஸ்க் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது. 

சிறைக்குள் செல்லப்போவது சரவணனா அல்லது கவினா..?


டாஸ்குகளை சிறப்பாக செய்ததாக மோகன் வைத்தியா, சாக்‌ஷி மற்றும் வனிதா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். 

அடுத்து டாஸ்க்குகளில் மிக மோசமான ஆட்டத்தைக் குறித்து பிக்பாஸ் வினாவினார். அதற்கு தலைவியான அபிராமி, சரவணன் மற்றும் சேரன் பெயரை தெரிவித்தார். 

இது பிக்பாஸ் வீட்டுக்குள் சச்சரவை கிளப்பியது. சரவணன் தானும் விளையாடியதாக தெரிவித்தார். முன்னதாக டாஸ்க் மீது அதிருப்தி தெரிவித்த சேரனும் போட்டியில் பங்கு கொண்டதாக கூறினார். எனினும், இதை வனிதா ஏற்றுக் கொள்ள மறுத்தார். 

ஆனால் சேரன் யார் சொல்வதையும் கேட்காமல், தலைவி அபிராமி சொல்லிவிட்டார் என்ற காரணத்தினால் கைதி உடையை அணிந்து சிறைக்கு செல்ல தயாரானார். அப்போது வனிதா, இந்த போட்டியில் கவின் பங்கேற்கவில்லை என்று கூறினார்.

பிரச்சினைகள் ஒருபுறம் இருக்க, பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும் சிறைக்குள் முதலில் செல்லவுள்ளார் கவினா அல்லது சரவணனா என்று மக்கள் ஆர்வத்தில் உள்ளனர். 

From around the web