இந்த வாரம் யார் எவிக்சன்? அதைவிட இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க!

 

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் சோம், ஆஜித், ஷிவானி, கேபி மற்றும் ரம்யா ஆகிய 5 பேர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர் என்பதும் இவர்களில் ஒருவர் இந்த வாரம் ஞாயிறு அன்று வெளியேறுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் இந்த வாரம் யார் வெளியே போவார்கள் என்று கணிக்க முடியாத அளவில் உள்ளது. ஆஜித் மற்றும் ஷிவானி ஆகிய இருவருக்கும் குறைந்த வாக்குகள் கிடைத்துள்ளதாகவும் ரம்யாவும் குறைந்த வாக்குகள் பெற்று உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன

நாளையுடன் வாக்குப்பதிவு முடிவடைய உள்ள நிலையில் நாளை இரவு தான் வெளியேறப் போவது யார் என்பது குறித்த தகவல்கள் தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போதைய நிலவரப்படி சமூக வலைத்தளங்களில் சோம்சேகருக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது 

som

ஒவ்வொரு வாரமும் ஆரிக்கே சமூக வலைத்தல பயனாளிகளின் ஆதரவு அதிகம் இருக்கும் என்பதும், அவர் நாமினேட் செய்யப்பட்டாலும் அவருக்கு அதிக வாக்குகள் கிடைக்கும் என்பதும் அவர் தான் முதலில் காப்பாற்றப்படுவார் என்பது தெரிந்ததே. ஆனால் இந்த வாரம் ஆரி நாமினேஷனில் இல்லை என்பதால் ஆச்சரியத்தக்க வகையில் சோம்க்கு ஆரி ரசிகர்களின் ஆதரவு கிடைத்துள்ளதாகவும் இறுதிப்போட்டியில் நுழையும் நால்வரில் ஒருவர் சோம் இருக்க அதிக வாய்ப்பு உள்ளதாகவும் கருதப்படுகிறது

இந்த வாரம் சோம் மிகவும் சிறப்பாக விளையாடியதால் அவரது ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாக்குகள் அளித்து வருகின்றனர் என்பதும் இந்த வாரம் சோம் முதலில் காப்பாற்றப்படுவது உறுதி என்றும் கூறப்படுகிறது
 

From around the web