இந்த வாரம் பெஸ்ட், போரிங் போட்டியாளர்கள் யார் யார்?

 

பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் சிறப்பாக செயல்பட்டவர்கள் மற்றும் மோசமாக செயல்பட்டவர்கள் என இரண்டு பேர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்பது தெரிந்ததே. அந்த வகையில் பந்து டாஸ்க்கில் சிறப்பாக செயல்பட்டு அதிக புள்ளிகள் எடுத்து ரியோ நேரடியாக அடுத்த வார கேப்டன் தேர்வில் தேர்வு செய்யபட்டார்

இதனையடுத்து சிறப்பாக செயல்பட்டவர்கள் என சோம், ஆரி ஆகிய இருவரும் தேர்வு செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து மோசமாக செயல்பட்டவர்கள் இருவர் தேர்ந்தெடுக்கும்போது பாலா மற்றும் அனிதா ஆகிய இருவர் இடையே வாக்குவாதம் நடந்தது என்பதும் ஒருவரை ஒருவர் நாமினேட் செய்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

gabi

அதன் பின்னரும் ஆஜித், கேபி, ஷிவானி ஆகிய மூவர் மோசமான போட்டியாளர்களாக இருந்த நிலையில் அவர்களில் ஷிவானி காப்பாற்றப்பட்டு கேபி, ஆஜித் ஆகிய இருவரையும் சிறைக்குள் தள்ளினர். இந்த வார மோசமான போட்டியாளர்கள் தேர்வு செய்ததில் கேபியால் ஒரு சிறு குழப்பம் ஏற்பட்டது என்பதும் அவர் நாமினேட் செய்யப்பட்டிருந்தும் நாமினேட் செய்யாதவர்களுடன் உட்கார்ந்து கொண்டு வாக்களித்தார் என்பதும் அதனை சற்று தாமதமாக பாலாஜி சுட்டிக் காட்டியதை ஆரி கண்டித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது

அடுத்த வார தலைவர் போட்டியில் ரியோ, சோம், ஆரி ஆகிய மூவர் தேர்வு செய்யப்பட்டிருப்பதால் போட்டி கடுமையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.,

From around the web