வெள்ளை உடை, மொட்டைமாடி போஸ்: வைரலாகும் தனுஷின் புகைப்படம் 

 

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ் நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவு செய்து அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார்

மொட்டைமாடியில் விளக்குகளின் வெளிச்சத்தில் தனுஷ் ஒரு நாற்காலியில் உட்கார்ந்து இருப்பது போன்றும், அவரது பளிச்சென்ற வெள்ளை உடை அவரது மனதை வெளிக்காட்டுவது போன்று இருப்பதாக ரசிகர்கள் இந்த புகைப்படம் குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர் 

dhanush

மேலும் இந்த புகைப்படத்தின் பின்னணியில் மிக அருமையாக தீபாவளி கொண்டாட்டம் நடைபெறும் காட்சிகளும் தென்படுகின்றன. தனுஷின் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ்களும் கமெண்ட்களும் குவிந்து வருகின்றன என்பதும் அவரது ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் இந்த புகைப்படத்தை பகிர்ந்து வருவதால் வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

தனுஷ் தற்போது ‘கர்ணன் மற்றும் ‘ஜகமே தந்திரம்’ ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார் என்பதும், அடுத்து அவர் ஒரு இந்தி படத்திலும் அதனையடுத்து கார்த்திக் நரேன் இயக்கும் படத்திலும் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தனுஷ், கார்த்திக் நரேன் திரைப்படத்தில் மாளவிகா மோகனன் தான் நாயகி என்பது குறிப்பிடத்தக்கது

From around the web