எஸ்பிபி இறுதிச்சடங்கு எங்கே? எப்போது?

 

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் இன்று பிற்பகல் 1.04 மணிக்கு காலமான நிலையில் அவருக்கு திரையுலகினர், அரசியல்வாதிகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அவரது இறுதிச்சடங்கு நடக்கும் நேரம் குறித்த தகவல் சற்றுமுன் வெளியாகியுள்ளது

எஸ்பிபி அவர்களின் உடல் இன்று மாலை 4 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கம் காம்தார் நகர் வீட்டுக்கு இறுதி அஞ்சலிக்காக எடுத்து செல்லப்படுவதாகவும், அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக சில நிமிடங்கள் வைக்கப்படவிருப்பதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. 

மேலும் எஸ்பிபி அவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் என மருத்துவமனை சான்றிதழ் கொடுத்துள்ளதால் பொதுமக்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தலாம் என்றும் கூறப்படுகிறது

சென்னை காம்தாநகர் இல்லத்தில் மாலை 4 மணிக்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக எஸ்.பி.பி. உடல் வைக்கப்படும் என்றும் அதன்பின்னர் எஸ்.பி.பி இறுதிச்சடங்கு அவருக்கு சொந்தமான தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டில் நடைபெறவிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது

From around the web