தயாரிப்பாளர் சங்க தேர்தல் எப்போது? அதிரடி அறிவிப்பு


 

 

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் நவம்பர் 22ஆம் தேதி நடைபெறும் என உயர்நீதிமன்றத்தால் நியமனம் செய்யப்பட்ட தேர்தல் அதிகாரி எம்.ஜெயசந்திரன் அறிவித்துள்ளார்

இந்த தேர்தல் அடையாறு எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் 22ம் தேதி காலை 8 மணி முதல் 4 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் அக்டோபர் 15-ஆம் தேதி காலை 11 மணி முதல் 23ம் தேதி 4:30 மணி வரை விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம் 

அக்டோபர் 24ஆம் தேதி வேட்பு மனுவை வாபஸ் பெற கடைசி நாள் என்றும் அக்டோபர் 29ஆம் தேதி மாலை 6 மணிக்கு வேட்பாளர்கள் இறுதி பட்டியல் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 

மேலும் நவம்பர் 22 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தெரிகிறது

டிசம்பர் 30க்குள் தேர்தலை நடத்தி முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து இந்த தேர்தல் அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்தலில் விஷால் அணி மற்றும் தாணு அணி மோதுமென எதிர்பார்க்கப்படுகிறது

From around the web