திரையரங்குகள் திறப்பது எப்போது? அமைச்சர் கடம்பூர் ராஜூ முக்கிய அறிவிப்பு!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 5 மாதங்களாக தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கப்படவில்லை. இதனை அடுத்து சூர்யாவின் சூரரைப்போற்று உள்பட பல திரைப்படங்கள் ஓடிடி பக்கம் சென்று கொண்டிருக்கின்றன.
 

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 5 மாதங்களாக தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கப்படவில்லை. இதனை அடுத்து சூர்யாவின் சூரரைப்போற்று உள்பட பல திரைப்படங்கள் ஓடிடி பக்கம் சென்று கொண்டிருக்கின்றன. தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி விஜய் சேதுபதியின் க/பெ ரணசிங்கம் திரைப்படமும் ஓடிடியில் ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த நிலையில் தமிழகத்தில் திரையரங்குகள் திறப்பது எப்போது என்பது குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்துள்ளார். மருத்துவ நிபுணர் குழுவின் அறிக்கையை பெற்ற பின்னரே திரையரங்குகள் திறப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று அவர் தெரிவித்தார். திரையரங்குகள் திறக்கப்பட்டால் மக்கள் தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்கவில்லை எனில் பாதிப்பு ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் 

இந்த நிலையில் டாஸ்மாக் மற்றும் போக்குவரத்து பேருந்துகள் இயங்கிவரும் நிலையில் அதில் தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறதா? என்ற கேள்வியை நெட்டிசன்கள் மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் எழுப்பி உள்ளனர்

From around the web