என்ன ஆச்சு சீனுராமசாமிக்கு? உயிருக்கு ஆபத்து என டுவிட் செய்துள்ளதால் பெரும் பரபரப்பு

 
என்ன ஆச்சு சீனுராமசாமிக்கு? உயிருக்கு ஆபத்து என டுவிட் செய்துள்ளதால் பெரும் பரபரப்பு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான சீனுராமசாமி திடீரென தனது டுவிட்டரில் தனது உயிருக்கு ஆபத்து என்றும் முதல்வர் ஐயா உதவ வேண்டும் என்றும் பதிவு செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

தென்மேற்கு பருவகாற்று, தர்மதுரை, கண்ணே கலைமானே, நீர்ப்பறவை உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவர் சீனு ராமசாமி. சமூக வலைதளங்களில் குறிப்பாக டுவிட்டரில் ஆக்டிவாக இருக்கும் இவர் இன்று காலை திடீரென எனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக உணர்கிறேன் முதல்வராக உதவவேண்டும் அவசரம் என்று டுவிட்டரில் பதிவு செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

இதனை அடுத்து கமெண்ட் பகுதியில் ரசிகர்கள் என்ன ஆச்சு உங்களுக்கு? உடனடியாக காவல்துறையில் புகார் அளியுங்கள் என்று பதிவு செய்து வருகின்றனர். யாரைக் கண்டும் அஞ்ச வேண்டாம் உங்களுக்கு நாங்கள் துணையாக இருப்போம் என்று நெட்டிசன்கள் ஆறுதலும் அளித்து வருகின்றனர்

உண்மையிலேயே சீனு ராமசாமிக்கு என்னாச்சு? உயிருக்கு ஆபத்து என்று உணர்கிறேன் என அவர் பதிவு செய்தது ஏன்? என ரசிகர்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர்

From around the web