என்ன வேணும்னாலும் விமர்சனம் பண்ணிக்கோங்க, எனக்கு கவலையே இல்லை: ஷிவானி

 

பிரபல டிவி நடிகை ஷிவானிநாராயணன் விரைவில் தொடங்க இருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார். இந்த நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் தினமும் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார் என்பதும் இந்த புகைப்படங்களுக்கு வித்தியாசமான கமெண்டுகளும் சில சமயம் அருவருக்கத்தக்க கமெண்டுகளும் பதிவாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது 

அதுமட்டுமின்றி ஷிவானி நாராயணன் இன்ஸ்டாகிராம் புகைப்படங்களை வைத்து பல ஊடகங்கள் குதர்க்கமான செய்திகளையும் வெளியிட்டு வருகின்றன. இந்த நிலையில் ஷிவானி நாராயணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது குறித்து அதிரடியாக கூறியுள்ளார் 

நான் என்ன உடை அணிய வேண்டும்? என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து என்னுடைய குடும்பத்தார் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்துள்ளனர். எனது பெற்றோர்கள் என்னை நல்ல விதமாக வளர்ந்துள்ளதால் எனது லிமிட் என்னவென்று எனக்குத் தெரியும்

என்னைப்பற்றி மூன்றாம் தரமாக விமர்சனம் செய்து அதன் மூலம் பணம் சம்பாதிப்பவரகளுக்கு நான் ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். என்னை நீங்கள் மூன்றாம் தரமாக விமர்சித்து காயப்படுத்த முடிந்தால் அது உங்களால் முடியாது என்று கூறியுள்ளார்

From around the web