போஸ்டரே இப்படின்னா படம் எப்படி இருக்கும்? மாஸ்டர் போஸ்டரை பார்த்து அசந்துபோன ரசிகர்கள்!

 

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான மாஸ்டர் திரைப்படம் வரும் 13-ஆம் தேதி உலகம் முழுவதும் மிகவும் பிரமாண்டமாக வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் சற்று முன்னர் மாஸ்டர் திரைப்படத்தின் அட்டகாசமான போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. இதில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி ஆக்ரோஷமாக மோதும் காட்சிகள் உள்ளதால் அதனை பார்த்து ரசிகர்கள் வாயடைத்துப் போய் உள்ளனர் 

master action

இந்த போஸ்டரை பார்க்கும் போதே இவ்வளவு ஆக்ரோஷமாக இருக்கும்போது, இந்த காட்சியை திரையில் பார்த்தால் எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் தற்போது தங்களது கற்பனைகளை ஓடவிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த படமும் இந்த காட்சியும் விஜய் மற்றும் விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு மாபெரும் ட்ரீட்டாக இருக்கும் என்பது மட்டும் உறுதியாகத் தெரிகிறது


 

From around the web