என்னது! கலைமாமணி அவார்டா?

தனது உழைப்பாலும், தனது திறமையாலும்,தனது விடாமுயற்சியினாலும் இன்று மிகப்பெரிய நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் "நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்". ஆரம்ப காலங்களில் சின்னத்திரையில் வலம் வந்த இவர் இப்பொழுது வெள்ளித்திரையில் பல மொழிகளிலும் பல படங்களில் நடிக்கிறார் என்பது அவரின் உழைப்பிற்கு கிடைத்த பரிசாக உள்ளது.இவரின் நடிப்பில் வெளியாகிய "காக்கா முட்டை" என்ற திரைப்படம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

மேலும் இவர் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாக்கிய "நம்ம வீட்டு பிள்ளை" என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.அத்திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு இவர் தங்கையாக நடித்து இருந்தார். இவரின் கதாபாத்திரம் மக்களை வெகுவாக கவர்ந்தது.
மேலும் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகிய "வடசென்னை" என்ற திரைப்படத்திலும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்தார். இத்திரைப்படத்தில் நடிகர் தனுசுக்கு இவர் ஜோடியாக நடித்திருந்தார். இவரின் நடிப்பு மக்களிடம் மிகுந்த வரவேற்பு பெற்றது.
மேலும் இவர் "ஆறாது சினம்"," திருடன் போலீஸ்" போன்ற பல படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் "கலைமாமணி" விருது பெற்றார். இதற்காக "லைகா புரொடக்ஷன்" தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு வாழ்த்து கூறியுள்ளது. மேலும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கலைமாமணி அவார்ட் பெற்றுள்ளார் என்பது அவரது ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் இன்பத்திற்கு உள்ளாகியுள்ளது.
Congratulations🎉 @aishu_dil on winning the “Kalaimamani Award” Wishes from Lyca team pic.twitter.com/3SAhKCeV2b
— Lyca Productions (@LycaProductions) February 19, 2021