’மாஸ்டர்’ திரைப்படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு? கசிந்த தகவல்கள்!

 

தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படத்தின் சென்சார் சான்றிதழ் சமீபத்தில் வெளியானது என்பது தெரிந்ததே. இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் யுஏ சான்றிதழ் அளித்துள்ளனர். இதனை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக சமீபத்தில் அறிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ’மாஸ்டர்’ படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது. இந்த படம் 178 நிமிடங்கள் அதாவது சுமார் 3 மணி நேரம் ரன்னிங் டைம் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. மூன்று மணி நேரம் என்பது சற்று அதிகமான ரன்னிங் டைம் என்றாலும் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைந்துள்ளதால் இந்த ரன்னிங் டைம் பெரிய குறையாக இருக்காது என்றே கருதப்படுகிறது

master

இந்த படத்தில் விஜய்சேதுபதியின் காட்சிகள் அதிகம் என்றும் அவரது காட்சிகளை எடிட் செய்ய முடியாத அளவிற்கு அனைத்தும் முக்கியத்துவமாக இருந்ததால் அனைத்து காட்சிகளையும் படத்தில் இடம்பெறச் செய்து விட்டதாகவும் அதன் காரணமாகத்தான் ரன்னிங் டைம் அதிகரித்து விட்டதாகவும் படக்குழுவினர் தரப்பில் இருந்து செய்தி கசிந்துள்ளது

From around the web