அட்லீ படத்தில் ஷாருக்கானுக்கு என்ன கேரக்டர்? பரபரப்பு தகவல்

விஜய் நடித்த தறி, மெர்சல் மற்றும் பிகில் ஆகிய வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் அட்லி அடுத்ததாக ஷாருக்கான நடிக்கவிருக்கும் படத்தை இயக்க உள்ளதாக செய்திகள் வெளியானது

 

விஜய் நடித்த தறி, மெர்சல் மற்றும் பிகில் ஆகிய வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் அட்லி அடுத்ததாக ஷாருக்கான நடிக்கவிருக்கும் படத்தை இயக்க உள்ளதாக செய்திகள் வெளியானது

இந்த படம் ட்ராப் ஆகி விட்டதாகவும், இல்லை மீண்டும் தொடங்க விருப்பது உறுதி என்றும் இருவேறு தகவல்கள் கோலிவுட் திரை உலகை சுற்றி வருகிறது 

இந்த நிலையில் இந்த படம் அடுத்த ஆண்டு இரண்டாம் பாதியில் தொடங்கியிருப்பது உறுதி என்று தற்போது வெளிவந்துள்ள தகவல் வெளிவந்துள்ளது 

இந்த படத்தில் ஷாருக்கான் ரா ஏஜெண்ட் ஆக நடிக்க இருப்பதாகவும் இதனால் படம் முழுவதும் அவருக்கு மொத்தம் பத்து கெட்டப்புகள் இருப்பதாகவும் இது ஒரு விறுவிறுப்பான துப்பறியும் கதை என்றும் கூறப்படுகிறது 

இந்த படத்திற்கான முழு ஸ்கிரிப்டையும் ஷாருக்காணிடம் அட்லி ஒப்படைத்து விட்டதாகவும் அதை படித்துப் பார்த்த திருப்தி அடைந்து அடுத்த ஆண்டு இரண்டாம் பாதியில் படப்பிடிப்பை தொடங்கலாம் என்று உறுதிமொழி கொடுத்திருப்பதாகவும் தெரிகிறது

இதனால் தற்போது இயக்குனர் அட்லி சுறுசுறுப்பாக அடுத்தகட்ட பணிகளை கவனித்து வருகிறார். ஷாருக்கான் இந்த படத்தின் ஹீரோ என்றாலும் தமிழ் உட்பட தென்னிந்திய நடிகர்கள் இந்த படத்தில் அதிகம் இடம் பெறுவார்கள் என்று கூறப்படுகிறது. அதேபோல் தொழில்நுட்ப கலைஞர்களும் முழுக்க முழுக்க தமிழ் திரையுலகைச் சேர்ந்தவர்கள் தான் என்றும் கூறப்படுகிறது 

From around the web