அது என்னப்பா? பிப்ரவரி 15! மாலை 5 மணி!

டைரக்டர் "கோகுலின்" புதுப் படத்தில் நடிக்க உள்ளார் "பிரபல நடிகர்"!
 
டைரக்டர் கோகுலின் ட்விட்டர் பக்கம் கூறும் தகவல்!

"காஷ்மோரா", "ஜூங்கா" போன்ற திரைப்படங்களை இயக்கியவர் "டைரக்டர் கோகுல்". மேலும் இவர் "நடிகர் ஜீவா" நடித்து வெளியாகிய "ரௌத்திரம்" என்ற படத்தை இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.நடிகர் விஜய் சேதுபதியின் வெற்றி திரைப்படமான "இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா" என்ற படத்தையும்  "டைரக்டர் கோகுல்" இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

gokul

தற்போது இவர் நடிகர் கார்த்தியுடன் மீண்டும் ஒரு படத்தில் பணியாற்ற உள்ளார் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அப்படத்தின் பெயர் மற்றும் "ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்" வருகின்ற "15ஆம் தேதி "மாலை 5 மணிக்கு வெளியாகும் என தனது டுவிட்டர் பக்கத்தில்  கூறியுள்ளார்.இது கார்த்தி ரசிகர்களுக்கு இன்பத்தை கொடுத்தது. ஏனென்றால் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் "சுல்தான்". இத்திரைப்படத்தின் ஒரு பாடல் வெளியாகி ரசிகர்களின் வைரலாக பரவுகிறது. இத்திரைப்படத்தில் கார்த்திக்கு பிரபல நடிகை "ரஷ்மிகா மந்தனா" ஜோடியாக நடித்துள்ளார்.

தற்போது இயக்குனர் கோகுல் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறிய தகவல் நடிகர் கார்த்தியின் ரசிகர்களுக்கு மற்றுமொரு இன்பத்தை அள்ளிக் கொடுத்துள்ளது.இதனால் நடிகர் கார்த்தியின் ரசிகர்கள் படத்தின் பெயர் என்னவாக இருக்கும் ,ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்படி இருக்கும் என்று எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.

From around the web