விஜய் அரசியல் கட்சி விவகாரத்தில் என்னதான் நடக்கிறது? குழப்பத்தில் ரசிகர்கள்

 

தளபதி விஜய் அரசியல் கட்சி ஆரம்பிக்க இருப்பதாகவும் அவரது விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்க தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்துள்ளார் என்றும், சற்றுமுன் செய்திகள் வெளியானது 

ஆனால் அவசர அவசரமாக விஜய்யின் பிஆர்ஓ இந்த தகவலை மறுத்தார். இதனை அடுத்து சில நிமிடங்களில் விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் அவர்கள் ’நான்தான் விஜய் மக்கள் இயக்கம் பெயரில் கட்சியை பதிவு செய்தேன் என்றும் அதில் இப்போதைக்கு விஜய்க்கு எந்த சம்பந்தமும் இல்லை என்றும் எதிர்காலத்தில் அவர் அந்த கட்சியில் இணைவாரா என்பதை அவரிடம் தான் கேட்க வேண்டும் என்றும் கூறினார் 

அரசியல் கட்சி தொடங்கவில்லை என்று விஜய் கூறியிருக்கும் நிலையில் விஜய் பெயரில் நான்தான் அரசியல் கட்சி தொடங்கினேன் என்று விஜய்யின் தந்தை கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் பல்வேறு அரசியல் குழப்பங்கள் இருந்துவரும் நிலையில் விஜய்யும் அவரது தந்தையும் மாறி மாறி அரசியல் குறித்த கருத்துக்களை தெரிவித்து வருவது விஜய் ரசிகர்களுக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது

From around the web