ரஜினிக்கு ஏதாவது ஒன்று என்றால்? பின் வாங்கிய சன் பிக்சர்ஸ்

 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் ’அண்ணாத்த’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ளது

இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு இப்போது தொடங்க வேண்டாம் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது 

ஏற்கனவே விஜயகாந்த், எஸ்பிபி ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ’அண்ணாத்த’ படப்பிடிப்பில் கலந்துகொண்டு ரஜினிக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் அதன் மொத்த பழியையும் சன் பிக்சர்ஸ் மேல் விழும் என்பதால் இந்த படத்தை இப்போது தொடங்க வேண்டாம் என்று சன் பிக்சர்ஸ் முடிவு எடுத்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன 

ஆனால் அதே நேரத்தில் ரஜினி இல்லாத காட்சிகளை படமாக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் அனுமதி அளித்துள்ளதாகவும் இயக்குனர் சிறுத்தை சிவா விரைவில் இந்த காட்சிகளை படமாக்க திட்டமிட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன

From around the web