செண்ட்ராயனை வெளியேற்ற கமல் சம்மதிக்கவில்லையா? திடுக் தகவல்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து செண்ட்ராயனை வெளியேற்ற கமல் சம்மதிக்கவில்லை என்றும், கமலை நீண்ட நேரம் சமாதானப்படுத்திய பின்னரே செண்ட்ராயன் வெளியேற்றம் நடந்ததாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. பிக்பாஸ் போட்டியாளர்களில் ஜூலியை விட அதிகமாக மக்களால் வெறுக்கப்படும் ஐஸ்வர்யாவை காப்பாற்ற பிக்பாஸ் பல தில்லுமுல்லுகள் செய்து வரும் நிலையில் கடந்த வாரம் ஐஸ்வர்யாவை விட அதிக வாக்குகள் பெற்றிருந்த செண்ட்ராயனை பிக்பாஸ் டீம் வெளியேற்ற முடிவு செய்தது. ஆனால் கமல் இதற்கு சம்மதிக்கவில்லை என்றும், கமல்ஹாசனிடம் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை
 

செண்ட்ராயனை வெளியேற்ற கமல் சம்மதிக்கவில்லையா? திடுக் தகவல்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து செண்ட்ராயனை வெளியேற்ற கமல் சம்மதிக்கவில்லை என்றும், கமலை நீண்ட நேரம் சமாதானப்படுத்திய பின்னரே செண்ட்ராயன் வெளியேற்றம் நடந்ததாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஜூலியை விட அதிகமாக மக்களால் வெறுக்கப்படும் ஐஸ்வர்யாவை காப்பாற்ற பிக்பாஸ் பல தில்லுமுல்லுகள் செய்து வரும் நிலையில் கடந்த வாரம் ஐஸ்வர்யாவை விட அதிக வாக்குகள் பெற்றிருந்த செண்ட்ராயனை பிக்பாஸ் டீம் வெளியேற்ற முடிவு செய்தது. ஆனால் கமல் இதற்கு சம்மதிக்கவில்லை என்றும், கமல்ஹாசனிடம் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்திய பின்னரே கமலை வலுக்கட்டாயமாக சம்மதிக்க வைத்ததாகவும் கூறப்படுகிறது.

செண்ட்ராயனை வெளியேற்ற கமல் சம்மதிக்கவில்லையா? திடுக் தகவல்மேலும் செண்ட்ராயன் கார்டை காண்பித்த பின்னர் அந்த கார்டை கமல் ஆத்திரத்துடன் தூக்கி எறிந்துவிட்டதாகவும், அந்த காட்சிகள் எல்லாம் கட் செய்யப்பட்டுவிட்டதாகவும் இந்த நிகழ்ச்சியை நேரில் பார்த்த சிலர் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியினால் தனக்கும் தன்னுடைய கட்சிக்கும் அதிக விளம்பரம் கிடைக்கும் என கமல் எதிர்பார்த்ததாகவும், ஆனால் அதற்கு மாறாக அவர் இதுநாள் வரை சேர்த்து வைத்த பெயர் தற்போது டேமேஜ் ஆகிக்கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

From around the web