சூரரைப் போற்று படத்தில் என்னென்ன பொய்கள்?

 

சூர்யா நடித்த சூரரைப்போற்று திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது என்பது தெரிந்ததே. ஆனால் அந்த படம் உண்மையில் ஜி ஆர் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை தழுவியதாக இல்லை என்பதும் அந்த படத்தில் ஏகப்பட்ட பொய்கள் இருக்கிறது என்பதும் சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன 

முதலில் நாயகன் ஜிஆர் கோபிநாத் இந்தியன் ஆர்மி தான் வேலை பார்த்தார் என்பதும் அவருக்கும் இந்தியன் ஏர்போர்ஸ்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல் நாயகன் சூரரைப்போற்று நாயகன் ஒரு தமிழர் போல் படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் ஜிஆர் கோபிநாத்துக்கும் தமிழகத்துக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லை அவர் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும் அவருடைய அனைத்து பிசினஸ்களும் கர்நாடக மாநிலத்தில் தான் இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது 

soorarai potru

மேலும் ஏர்லைன் ஆரம்பித்து அவர் வெற்றிகரமாக சம்பாதித்துள்ளதாக இந்த படத்தில் காட்டப்பட்டுள்ளது. உண்மையில் உலகில் எந்த ஏர்லைன்ஸ் லாபத்தில் இயங்க வில்லை என்பதும் ஏர்லைன்ஸ் ஆரம்பித்த விஜய் மல்லையா உள்பட அனைத்து ஏர்லைன்ஸ் நிறுவனங்களுமே தோல்வியில் நஷ்டத்தில் தான் முடிந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது

எனவே இளைஞர்களை தவறாக வழிநடத்தும் வகையில் ஏர்லைன்ஸ் ஆரம்பித்தால் லாபம் கிடைக்கும் என்பதும் ஒரு பொய்யான தகவலாகும்  ஜிஆர் கோபிநாத்தின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டதாக கூறப்படும் சூரரைப்போற்று முழுக்க முழுக்க அவருடைய வாழ்க்கைக்கு சம்பந்தமில்லாத திரைக்கதைதான் உருவாக்கப்பட்டுள்ளது என்று நெட்டிசன்கள் கூறிவருகின்றனர்

From around the web