திரையரங்குகள் திறக்க என்னென்ன வழிகாட்டு முறைகள்: தமிழக அரசு அறிவிப்பு!

 

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 7 மாதங்களுக்கு மேலாக தமிழகத்தில் திரையரங்குகள் மூடப்பட்டிருக்கும் நிலையில் வரும் பத்தாம் தேதி முதல் திரையரங்குகள் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது என்று வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம் 

இந்த நிலையில் தற்போது திரையரங்குகள் திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து தற்போது பார்ப்போம்

முதல்கட்டமாக முகக்கவசம் அணியாத பார்வையாளர்களுக்கு தியேட்டர்களில் அனுமதி இல்லை என்றும் கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்த பிறகே தியேட்டருக்குள் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் அனைவருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு கொரோனா அறிகுறி இல்லாதவர்கள் மட்டுமே தியேட்டருக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அரங்கத்தின் கொள்ளளவில் 50 சதவீதம் மட்டுமே நிரப்பப்பட வேண்டும் என்றும் சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் இரண்டு நபர்களுக்கு நடுவில் ஒரு இருக்கை காலியாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது காலி இருக்கைகள் சரியாக இருக்கின்றதா என்பதை சோதனை செய்யப்படும் என்றும் ஏசியின் அளவு 24 டிகிரிக்கும் குறைவாக இருக்கக்கூடாது என்றும் ஒரு காட்சி முடிந்து அடுத்த காட்சி தொடங்குவதற்கு முன் அரங்கை மொத்தமாக கிருமிநாசினியாக சுத்தம் செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது

மேலும் டிக்கெட் எடுப்பது முதல் பாப்கார்ன் உள்ளிட்ட திண்பண்டங்கள் வாங்குவது வரை மொபைல் செயலிகளை பயன்படுத்தவும் பார்வையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web