தீபாவளி ரிலீஸ் பட்டியல் இருந்து திடீரென விலகிய 2 படங்கள் என்னென்ன?

 

வரும் தீபாவளிக்கு திரையரங்கில் திறந்து விட்டதால் ஒரு சில திரைப்படங்கள் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது 

அதன்படி ஜீவாவின் ’களத்தில் சந்திப்போம்’ சசிகுமாரின் ’எம்ஜிஆர் மகன்’ மற்றும் சந்தானம் நடித்த ’பிஸ்கோத்து’ ஆகிய திரைப்படங்களும் இதனை அடுத்து இரண்டாம் குத்து\’ என்ற திரைப்படமும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது

இந்த நிலையில் தற்போது தீபாவளி திரைப்படத்திலிருந்து இரண்டு படங்கள் பின்வாங்கி விட்டன ஜீவாவின் களத்தில் சந்திப்போம் மற்றும் சசிகுமாரின் எம்ஜிஆர் மகன் ஆகிய படங்கள்தான் பின்வாங்கிவிட்டன.

mgr magan

திரையரங்குகளுக்கு கூட்டம் வருமா என்ற சந்தேகம் ஏற்பட்டு உள்ள காரணத்தினால் இந்த இரண்டு படங்கள் பின் வாங்கி இருக்கலாம் என கருதப்படுகிறது. இருப்பினும் தீபாவளி அன்று ட்ரெய்லர் ரிலீஸ் ஆகும் என எம்ஜிஆர் மகன் படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அந்த அறிவிப்பு கூட களத்தில் சந்திப்போம் படக்குழுவினர்களிடம் இருந்து வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த தீபாவளிக்கு இரண்டாம் குத்து மற்றும் ’பிஸ்கோத்து’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் மட்டுமே திரையரங்குகளில் வெளியாகிறது என்பதும், மூக்குத்தி அம்மன் திரைப்படம் ஓடிடியில் வெளியாகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

From around the web