என்ன ஒரு அட்டகாசமான டிரைலர்: சூர்யா ரசிகர்கள் பெருமிதம்

 

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள சூரரைப்போற்று திரைப்படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகியுள்ள நிலையில் என்ன ஒரு அட்டகாசமான டிரெய்லர் என சூர்யா ரசிகர்கள் பெருமிதம் கொண்டு இந்த படத்தின் ஹேஷ்டெக்கில் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர் 

இரண்டு நிமிட ட்ரைலரில் ஆரம்பம் முதல் இறுதிவரை விறுவிறுப்பான காட்சிகள் உள்ளது என்றும் ஒரு சாதாரண இளைஞன் விமான நிறுவனம் முதலாளிகளை எதிர்த்து பொது மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற கருத்தில் ஒரு ரூபாய்க்கு விமான நிறுவனத்தை ஆரம்பிக்க இருப்பதும் அதனால் ஏற்படும் சிக்கல்களும் தான் இந்த படத்தின் கதை என்பதும் இந்த டிரைலரில் இருந்து தெரிய வருகிறது 

சுதா கொங்கராவின் ஒவ்வொரு வசனமும் ஆழமும் அழுத்தமும் உடையதாக இருப்பதால் இந்த படம் வேற லெவலுக்கு இருக்கும் என்றும் இந்த படம் ஓடிடியில் ரிலீசாவது மிகுந்த வருத்தத்திற்கு உரியது என்றும் சூர்யா ரசிகர்கள் கூறி வருகின்றனர். மேலும் இந்த படம் திரையரங்குகளில் வெளிவந்திருந்தால் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கும் என்றும் இருப்பினும் திரை அரங்குகள் திறந்த உடன் மீண்டும் ஒருமுறை இந்த படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்றும் ரசிகர்கள் கேட்டுக் கொண்டு வருகின்றனர் 

மேலும் சூரரைப்போற்று டிரைலரில் இந்த திரைப்படம் நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி விருந்தாக வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது

சூர்யாவின் சூரரைப்போற்று படத்தின் அட்டகாசமான டிரெய்லர் இதோ:


 

From around the web