என்ன ஒரு கேஷுவல் லுக்...!

தனது போட்டோ மூலம் தனது ட்விட்டர் பக்கத்தை அழகுபடுத்தும் "நடிகர் கௌதம் கார்த்திக்"...!
 
நடிகர் கௌதம் கார்த்திக்கின் ட்விட்டர் பக்கம் கூறும் கருத்து...,

"பாம்பே", "செக்கச்சிவந்த வானம்", "ஓ காதல் கண்மணி" போன்ற வெற்றி படங்களை இயக்கியவர் பிரபல இயக்குனர் "மணிரத்தினம்"."மணிரத்னம்" இயக்கத்தில் "நடிகர் கௌதம் கார்த்திக்" நடிப்பில் வெளியான திரைப்படம் "கடல்". இத்திரைப்படத்தில் கௌதம் கார்த்திக் உடன் "ஆக்சன் கிங் அர்ஜுன்" நடித்திருப்பார். இத்திரைப்படத்தில் "நடிகர் அரவிந்த்சாமி" இவர்களுடன் இணைந்து நடித்திருப்பார். இத்திரைப்படம் வெளியாகி பல்வேறு விருதுகளையும், சாதனைகளையும் படைத்தது. இத்திரைப்படம் நடிகர் கௌதம் கார்த்திக்கு ஒரு வெற்றிப் படமாக அமைந்தது .

gautham karthik

பின்னர் கௌதம் கார்த்திக்  "ரங்கூன்", "தேவராட்டம் ","முத்துராமலிங்கம்" போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர் பிரபல நடிகரும், "நவரச நாயகன்" என்று அழைக்கப்படும் நடிகர் கார்த்திக்கின் மகன் ஆவார். இவரது தந்தையான நடிகர் கார்த்திக் "மௌனராகம்"," அமரன்" போன்ற பல்வேறு தமிழ் படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது நடிகர் கௌதம் கார்த்திக் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துடன் கூடிய தனது புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார். அந்த புகைப்படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்று வைரலாக பரவிக் கொண்டு வருகிறது.
 
மேலே வானம்,
கீழே மணல்,
பெருங்கடல் காற்று,
அமைதியுடன் ஆத்மா! என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார் நடிகர் கௌதம் கார்த்திக்.

From around the web